ஸ்டாலினுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது.. பாட்னாவிலிருந்து பாதியில் கிளம்பியதே சாட்சி: அண்ணாமலை
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது.. அதற்கு அவர் பாட்னாவிலிருந்து பாதியில் கிளம்பியதே சாட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினையும் அண்ணாமலை தனது பேட்டியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், உதயநிதி குறித்து கேள்வி எழுப்பினார். 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று உதயநிதி கூறியுள்ளாரே என்று செய்தியாளர் அண்ணாமலையிடம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், " இங்கு பிரச்சனை என்னவென்றால், அவர்களுக்கு சத்தமாக ஆங்கிலம் தெரியாது. தமிழும் அரைகுறையாகத்தான் தெரியுது. ஹிந்தி என்பது ஜீரோ.
அதனால் திமுககாரங்க, பிரதமர் சொன்னதில் என்ன புரிஞ்சுகிட்டாங்க.. அவங்ககிட்ட ஹிந்தி பேசுறவங்க யாராவது இருக்காங்களா.. ஆங்கிலம் பேசுறவங்க யாராச்சும் இருக்காங்களா... திமுகவை பொறுத்தவர் புவர் கம்யூனிகேசன். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே ஒரு மொழியை மட்டும் தான் பேசுகிறார். அதனால்தான் பாட்னாவில் போய் சும்மா உட்கார்ந்துவிட்டு கிளம்பி வருகிறார். கர்நாடகா போனாலும், முதலமைச்சர் அவர்களால் ஆங்கிலமும் பேச முடியாது. இந்தியும் பேச முடியாது.
அதனால் பிரதமர் சொன்னதை எந்தவித புரிதலும் இல்லாமல் பேசுகிறார்கள். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின். அவருக்கு என்ன புரியும் இதில்?
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கிறீங்க.. இங்க சிரிக்கிறார், அங்க சிரிக்கிறார், ஏதோ சினிமா படத்தின் ஷூட்டிங் மாதிரி, உதயநிதி ஸ்டாலின் நடந்து கொண்டு போகிறார். பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல வேண்டும் என்கிற அக்கறை தமிழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை.
முதலில் அவருக்கு என்ன புரிந்தது என்று நான் கேட்கிறேன். பிரதமர் சொன்னதில் உங்களுக்கு என்ன புரிந்தது. அதெல்லாம் விட்ருங்க.. உங்க நிதியமைச்சர். நீங்கள் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக சொன்னாரே.. அதாவது உங்களுக்கு புரிஞ்சதா.. அதுவும் ஆங்கிலத்தில் தான் பேசினாரு.. அதனால தான் உங்களுக்கு புரியாதுன்னு தமிழில் சப் டைட்டில் போட்டோம்.
அதனால் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், முதலமைச்சர் அவர்களும், உங்கள் கேபினட்ல முதல்ல ஆங்கிலம் பேசுறவங்கள,இந்தி பேசுறவங்கள ஒன்று இரண்டு பேரை வைத்துக்கொள்ளுங்கள். கருணாநிதி அவர்கள் சொன்னார்கள்.. தயாநிதி மாறனை ஏன் கேபினட்டிற்கு அனுப்புறேன் என்றால், அவருக்கு இந்தி பேச தெரியும். அந்த மாதிரி நாலு பேரை கூட வைத்துக் கொண்டீர்கள் என்றால், பிரதமர் என்ன பேசினார் என்பது உங்களுக்கு முழுமையாக தெரியும்.

அது புரியாமல் ஏன் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் தமிழக மக்களின் கேள்வி. எல்லா இடத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பிரதமர் சொன்னார் என்பதை நிரூபித்தால் ஒரு கோடி என்ன,ஒரு கோடியே 200 ரூபாய் பரிசு கொடுக்கிறோம், 2 கோடி கொடுக்கிறோம் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.
எனவே பிரதமர் பேசிய வீடியோ எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆடியோ எல்லா இடத்திலும் இருக்கிறது. பல முறை அதை நானே தமிழில் மொழி பெயர்த்து போட்டிருக்கிறேன். சப் டைட்டில் உடன் போடுகிறோம். அதை பார்த்தாவது முதலமைச்சர் அவர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் புரியட்டும்.
இவர்கள் பிரதமருடன் ஒத்துழைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை சுதந்திரமாக வேலை செய்ய விட்டார்கள் என்றால், செந்தில் பாலாஜி மொரீசியஸில் பதுக்கிய பணத்தையே கொண்டு வந்துவிடலாம்" இவ்வாறு அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!












Click it and Unblock the Notifications