சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் பரிசளித்த 7 புத்தகங்கள் என்னவெல்லாம் தெரியுமா?.. எல்லாமே செம சூப்பர்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் தமிழக சட்டசபையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் சட்டசபையில் திறக்க முடிவெடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் மு.க .ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். இதற்கு தலையாட்டினார் குடியரசுத் தலைவர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் நடந்த கோலாகலமான விழாவில் 5 முறை முதல்வராகவும், 13 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை... கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்..!தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் பணிகள் நடைபெறவில்லை... கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்..!

முக்கியத்துவம் மிக்க நாள்

முக்கியத்துவம் மிக்க நாள்

''இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த புகழ்பெற்ற மண்டபத்தில் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி. நீண்ட வருடங்கள் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த கருணாநிதி தனி முத்திரையை பதித்து சென்றுள்ளார். அரசியல் மட்டுமின்றி தமிழ் இலக்கியம் மற்றும் சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் பெரியது மிகப்பெரியது'' என்று கருனாநிதிக்கு புகழாரம் சூட்டினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

 புத்தகங்கள் பரிசளிப்பு

புத்தகங்கள் பரிசளிப்பு

முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்சில புத்தகங்களையும் பரிசாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் என்னெவென்பது இப்போது தெரியவந்துள்ளது. அதாவது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் 7 மொழி பெயர்ப்பு புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு விமான நிலையத்தில் வைத்து ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

ஜெனரேஷன்ஸ்

ஜெனரேஷன்ஸ்

இதில் முதலாவது மனிதர்களின் வாழ்வியலை போதிக்கும் உலக பொதுமறையாம் திருக்குறளின் ஆங்கில பதிப்பு புத்தகமாகும். நாட்டின் சிறந்த 10 புதினங்களில் ஒன்றான பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய ஜெனரேஷன்ஸ் என்ற புத்தகமும் பரிசளிக்கப்பட்டது. தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் மோதல்களை கருவாக கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

வாடிவாசல் நாவல்

வாடிவாசல் நாவல்

இதேபோல் தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பிடும் வாடிவாசல் நாவலும் பரிசளிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை சி.சு.செல்லப்பா எழுதிய இந்த நாவலில் ஜல்லிக்கட்டு வரலாறு, பின்னணி மிக சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கரிசல் கதைகள் என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    பெரிய தலைகளுக்கு MK Stalin கொடுத்த பரிசு | MK Stalin Delhi Visit | Oneindia Tamil
    செம்பருத்தி

    செம்பருத்தி

    பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை விவரிக்கும் சுழலில் மிதக்கும் தீபங்கள் என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனை ராஜம் கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண், பெண் குடும்ப உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் கூட்டு குடும்பத்தை பற்றி பேசும் தி.ஜானகி ராமன் எழுதிய செம்பருத்தி என்ற நாவலும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. இதே போல் Early Writing System என்ற புத்தகத்தையும் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

    ஸ்டாலின் வேண்டுகோள்

    ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தனக்கு பொன்னாடைகள் பரிசளிக்க வேண்டாம். அதற்கு பதிலாக புத்தங்கள் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரை சந்திக்கும் பிரமுகர்கள் புத்தங்களை பரிசாக கொடுத்து வருகின்றனர். இதேபோல் முதல்வரும் மற்ற பிரமுகர்களுக்கு புத்தகங்களை பரிசாக கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister of Tamil Nadu MK Stalin presented 7 books to President Ramnath Govind who unveiled the portrait of Karunanidhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X