Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு எதிரான ஜூன் 12 பாட்னா எதிர்க்கட்சிகள் சங்கமம் தேதியை மாற்ற முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வியூகம் வகுக்க பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் சங்கமம் நிகழ்வை ஜூன் 12-க்கு பதில் வேறு ஒரு தேதியில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தலை பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரே அணியில் எதிர்கொள்ள வேண்டும் என்பது பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் வியூகம். இதற்கு ஆர்ஜேடி தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் துணை நிற்கிறார். இரு தலைவர்களும் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் ஒவ்வொரு மாநிலமாக சென்று நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து வருகின்றனர்.

Tamilnadu CM MK Stalin wants to change Date June 12 Oppositions Patna meet

இதன் அடுத்த கட்டமாக, பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ந் தேதி பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது என முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுடன் கை கோர்க்க தயங்கி வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரும் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என கூறப்பட்டாலும் யார் பங்கேற்பது என தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய பாஜக அரசு மசோதா கொண்டு வந்தால் அதனை திமுக எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தினார். திமுக நிச்சயம் இம்மசோதாவை எதிர்க்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்த் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை நீர் திறப்பு நிகழ்வில் பங்கேற்க வேண்டும். அதனால் ஜூன் 12-ந் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. ராகுல் காந்தியும் வெளிநாட்டில் இருக்கிறார். ஆகையால் அவரும் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜூன் 12-ந் தேதி கூட்டத்தை வேறு ஒரு தேதியில் நடத்தலாம் என கோரிக்கை விடுத்துள்ளேன் என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+