அதிமுக- பாஜக கூட்டணி முறிவு கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தந்த ’அந்த ரியாக்சன்’.. கலகல அறிவாலயம்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது தொடர்பான கேள்விக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தந்த ரியாக்சனால் அண்ணா அறிவாலயம் கலகலத்தது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் தொடர் விமர்சனங்கள் அண்ணா திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. ஜெயலலிதாவில் தொடங்கி பேரறிஞர் அண்ணாவரை அண்ணாமலையின் விமர்சனங்கள் நீடித்தன.

அண்ணாமலைக்கு அண்ணா திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனாலும் அண்ணாமலையின் விமர்சனம் ஓயவில்லை. இதனால் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லியை வலியுறுத்தியது அதிமுக. இதற்காகவே அதிமுகவின் தலைவர்கள் 5 பேர் குழு டெல்லி சென்றது. ஆனால் டெல்லி தலைமையோ அண்ணாமலை நீக்க முடியாது என மறுத்துவிட்டது.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இதனால் பாஜகவுடனான கூட்டணியை முறிப்பதாக அதிமுக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமான பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்ற்ப்பட்டது.

அப்பட்டமான நாடகம்: இருந்த போதும் அதிமுக, பாஜக தலைவர்கள், இந்த கூட்டணி முறிவு கருத்து அடுத்தடுத்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இந்த கூட்டணி முறிவு என்பதே ஒரு நாடகம்; சூழ்ச்சி என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி இடதுசாரிகள், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ஸ்டாலின் ஆலோசனை: இந்நிலையில் சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வெளியே வந்த போது, அதிமுக- பாஜக கூட்டணி முறிவு தொடர்பாக செய்திகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். ஆனால் இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கவில்லை.

புன்னகையே பதில்: அதேநேரத்தில் வழக்கம் போல இல்லாமல், அதிமுக- பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு புன்னகையையே பதிலாக அளித்த படி காரில் ஏறி அமர்ந்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.யை அழைத்து, உங்களைத்தான் பத்திரிகையாளர்கள் அழைக்கின்றனர் என கிண்டலாக கூறிவிட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications