புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழந்தார்.
சென்னை: பிரபல புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் உயிரிழந்தார். புகைப்பட கலைஞரின் மரணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப். கடந்த காலங்களில் இவர் எடுத்த பல புகைப்படங்கள் மாநிலத்தையே அதிர வைப்பதாக இருந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது எடுத்த புகைப்படங்கள் திமுக தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு அடுத்துள்ள மறைமலைநகர் அருகே ஸ்டாலின் ஜேக்கப் சென்று கொண்டிருந்த போது அவரது பைக் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். மேலும், அவருடன் பணித்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்தார்.
புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப்பின் மரணத்திற்கு அவருடன் பணியாற்றிய பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே முதல்வர் ஸ்டாலினும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications