செம "டஃப் ஃபைட்.." வெளியானது 25 தொகுதி பட்டியல்.. வானதி, எச்.ராஜாவுக்கு எதிராக களமிறங்கும் காங்கிரஸ்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 25 தொகுதிகளுக்கான தொகுதிப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
கணிசமான இடங்களில், பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி நேரடியாக மோதுகிறது. பல இடங்களில் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாக மோதும் நிலை உருவாகியுள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இவைதான்: பொன்னேரி, வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீபெரும்பதூர், சோளிங்கர், வேலூர், காரைக்குடி, விளவங்கோடு, ஓமலூர், சேலம், ஊத்தங்கரை, குளச்சல், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, விருத்தாசலம், உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவாடாணை, மயிலாடுதுறை, கோவை தெற்கு, கிள்ளியூர், நாங்குநேரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், உதகை ஆகியவை அந்த தொகுதிகளாகும்.

அதிமுகவுடன் நேரடி மோதல்
வேளச்சேரியில் நேரடியாக அதிமுகவுடன் காங்கிரஸ் மோதுகிறது. மயிலாடுதுறையிலும் அவ்வாறு நேரடி போட்டி இருக்கிறது. உடுமலைப்பேட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணனை காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திருவாடானை தொகுதி, கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், விருதாச்சலம், அறந்தாங்கி, தென்காசி, ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளிலும், சோளிங்கர், ஊத்தங்கரை தனித்தொகுதி, ஓமலூர் ஆகியவற்றிலும் அதிமுகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோத உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 2 தொகுதிகளில் பாஜகவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோத உள்ளது. இதேபோல காரைக்குடி தொகுதி அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் மோத உள்ளது. ஆக மொத்தம் 5 தொகுதிகளில் காங்கிரஸ் vs பாஜக மோத உள்ளன.

வானதி, எச்.ராஜா
கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு முக்கிய தலைவர்களுக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிடப்போவதால் ஆர்வம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் தொகுதிகள்
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அங்கு அவரது நினைவிடம் அமைந்துள்ளது. எனவே ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எப்போதுமே, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி கேட்பதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் லோக்சபா தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியில் ஜெயக்குமார் பதவி வகித்து வருகிறார். அதற்கு உள்ளே உள்ளது, பொன்னேரி தொகுதி என்பதால் அந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை வழங்கக்கூடாது என்று திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications