ஷாக்! தமிழகத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்.. உயிரிழப்புகளும் அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இன்று 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் அதேபோல கடந்த டிச. 3ஆவது வாரம் முதலே வைரஸ் பாதிப்பு மீண்டும் மேல்நோக்கி செல்ல தொடங்கிவிட்டது.

கடந்த மாதத்தில் ஆயிரத்திற்குக் கீழ் வரை சென்ற மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு, இப்போது மீண்டும் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டங்களில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

 20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

20 ஆயிரம் பேருக்கு பாதிப்பு


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.56 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 பேர் உட்பட மொத்தம் 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,68,500ஆக உயர்ந்துள்ளது,

 உயிரிழப்பு

உயிரிழப்பு

அதேபோல உயிரிழப்புகள் எண்ணிக்கையும் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த வாரம் வரை 10 என்ற அளவில் இருந்த தினசரி உயிரிழப்புகள், இன்று 25 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் என 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல மதுரையில் 3 பேரும் திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழ்நாட்டில் இதுவரை 36,930 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அச்சமூட்டும் அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 88,959 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஆக்டிவ் கேஸ்கள் 1,03,610ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் ஒரே நாளில் 6,235 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 27,27,960 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 பாசிட்டிவ் விகிதம்

பாசிட்டிவ் விகிதம்

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு பாசிட்டிவ் விகதமும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 21.9ஆகவும் செங்கல்பட்டில் 21.1ஆகவும் உள்ளன. மேலும், ராணிப்பேட்டையிலும் பாசிட்டிவ் விகிதம் 20.6ஆக உள்ளது. இது தவிரக் காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களிலும் பாசிட்டிவ் விகிதம் 10ஐ தாண்டியுள்ளது.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல்
     மாவட்ட ரீதியாகப் பாதிப்பு

    மாவட்ட ரீதியாகப் பாதிப்பு

    தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் கடந்த மே மாதத்தைப் போல மாறிவருகிறது. ஒரே நாளில் தலைநகர் சென்னையில் 8218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 40%க்கு மேல் ஆகும். அதேபோல செங்கல்பட்டில் 2030 பேருக்கும் கோவையில் 1162 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+