தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில்.. இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.. காரணம் வேக்சின் பணிகள்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 602 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட, ஓமிக்ரான் அச்சம் காரணமாக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர், கர்நாடகாவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 602 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,41,013 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 1.2%ஆகவும் செங்கல்பட்டு மற்றும் நாமக்கல்லில் பாசிட்டிவ் விகிதம் 1.1%ஆக உள்ளது. சென்னையில் 132 பேருக்கும் கோவையில் 95 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 50 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தாண்டி வேறு மாநிலங்களில் எங்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மயிலாடுதுறை, நாகை, தென்காசி, தேனி மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

உயிரிழப்பு
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். கோவையில் 2 பேரும் ஈரோடு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தல ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,691 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,172ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,078ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,97,244 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications