கட்டுக்குள் கொரோனா.. 22 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த பாதிப்பு.. பாசிட்டிவ் விகிதமும் குறைவு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 613 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 22 மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் 10க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக அப்போது மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பிறகு மாநிலத்தில் வைரஸ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வருகிறது. மாநிலத்தில் தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 613 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,39,196 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 1.1%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8%ஆக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1க்கு கீழாகவே உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 6 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னை மற்றும் திருப்பூரில் தல 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,676 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,407ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,346 ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 665 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,95,174 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 125 பேருக்கும் கோவையில் 101 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல அரியலூர், கடலூர் உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications