குட் நியூஸ்! 7000க்கு கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. 5 மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7000க்கும் கீழ் குறைந்துள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், தற்போது ஓமிக்ரான் அச்சம் உலகெங்கும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
அதேநேரம் தினசரி கொரோனா பாதிப்பு என்பது மாநிலத்தில் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் ஐக்கிய அமீரகம் மற்றும் பிரிட்டனில் இருந்து திரும்பிய தல இருவர், ஆந்திராவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 604 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,41,617 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது.

5 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் எங்கும் பாசிட்டிவ் விகிதம் 1ஐ தாண்டவில்லை. செங்கல்பட்டு, கோவை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1ஆக உள்ளது. மாநில வாரியாக பாதிப்பில் அதிகபட்சமாகச் சென்னையில் 136 பேருக்கும் கோவையில் 94 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களைத் தவிர வேறு மாநிலங்களில் எங்கும் 50க்கும் மேல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களில் இன்று யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை.

உயிரிழப்பு
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகக் கோவை மற்றும் திருப்பூரில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 36,699 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,078ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 6,979ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 695 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,97,939 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications