சூப்பர்! 1800க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு! ஆனால் 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று தினசரி பாதிப்பு 1800க்கு கீழாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் பல மாதங்கள் தினசரி வைரஸ் தொடர்ந்து குறைந்தே வந்தது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இது கொரோனா பாதிப்பு குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது.

தினசரி பாதிப்பு
மூன்றாம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு 30,700வரை சென்றது. ஆனால், இப்போது தினசரி பாதிப்பு 1800க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36,028 பேருக்கு கொரோனா டெஸ்டிங் செய்யப்பட்டுள்ளது. அதில் வங்கதேசத்தில் இருந்து திரும்பிய ஒருவர் ஆந்திராவில் இருந்து திரும்பிய இருவர் என மொத்தம் 1712 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 35,39,607 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று மாநிலத்தில் 14,284 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 13,890ஆகக் குறைந்து உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 4455 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1417 பேரும் கோவையில் 1236 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த வாரத்தில் பல நாட்களில் தினசரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்து வந்தனர். இதனிடையே இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,032ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 2,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,87,685ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் கூட, மூன்று மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டி உள்ளது. தலைநகர் சென்னையில் 368 பேருக்கும், செங்கல்பட்டில் 177 பேருக்கும் கோவையில் 166 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் இப்போது மாநிலத்தில் 6.2 ஆக உள்ளது. குறிப்பாகக் கோவையில் 11.9%ஆகவும் மயிலாடுதுறையில் 10.5ஆகவும் திருவள்ளூரில் 11.1%ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications