தமிழகத்தில் மேலும் 5,516 பேர் கொரோனாவால் பாதிப்பு.. கொங்கு மண்டலத்தில் கிடுகிடுக்கும் தொற்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஒரே அளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இன்று கொரோனா தொற்றால் 5,516 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46703 பேர் மட்டுமே தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை 10 நாள் முன்பு 3 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 46 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது.

சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்ட.ங்களை தவிர பெரும்பலான மாவட்டங்களில் தொற்று
எண்ணிக்கை குறைந்துவிட்டது,. அரசு பிசிசூர் பரிசோதனை எண்ணிக்கையை 86 ஆயிரம் என்கிற அளவில் உயர்த்தி உள்ளது. கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை இன்று பாதிப்பைவிட குறைவாக உள்ளது.

இன்று எவ்வளவு

இன்று எவ்வளவு

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு

டிஸ்சார்ஜ் எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,206 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,86,479 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1263 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 488 பேரும், சேலத்தில் 259 பேரும், கடலூரில் 248 பேரும், திருவள்ளூரில் 149 பேரும், வேலூரில் 150 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு பலி

இதுவரை எவ்வளவு பலி

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 60 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,811 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 7 பேரும், கோவையில் 6 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை 86 ஆயிரம்

பரிசோதனை 86 ஆயிரம்

தமிழக அரசு பரிசோதனை எண்ணிக்கை பெரிய அளவில் உயர்த்தி உள்ளது. இன்று மட்டும் 86,073 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 64,74,656 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 84,338 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62,74,931 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,703 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

எவ்வளவு பாதிப்பு

எவ்வளவு பாதிப்பு

மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,55,639 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 9706 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 568 பேரும், கடலூரில் 297 பேரும், சேலத்தில் 291 பேரும், செங்கல்பட்டில் 283 பேரும், திருவள்ளூரில் 207 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+