தமிழகத்தில் இன்று 1647 பேருக்கு கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் பாசிட்டிவ் விகிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1647 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 16,993 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்படவே மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வரத் தொடங்கியது.

தற்போது கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாதிப்பு கையை மீறிச் செல்லவில்லை.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு ஏற்ற இறக்கத்துடனேயே உள்ளது. இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 1,50,159 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஆந்திராவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1,647 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,48,688 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1.1 ஆகவே நீட்டிக்கிறது. அதிகபட்சமாக நாகையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.6% ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சையில் 2.3%, கோவை மற்றும் திருப்பூரில் பாசிட்டிவ் விகிதம் 2% ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 1%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

இது தவிர இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆவர். அதேபோல கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத 2 பேரும் 50 வயதுக்குக் குறைவான 2 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகத் திருப்பூரில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேபோல கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 16,984ஆகப் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 16,993ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,619 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,96,316 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் இன்று கோவையில் தான் மோசமாக உள்ளது. தலைநகர் கோவையில் இன்று மொத்தம் 218 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 109 பேருக்கும், ஈரோட்டில் 112 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+