தமிழகத்தில் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் கொரோனா.. இன்று 1661 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்திற்கும் கீழாகவே தொடர்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அதன் பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு சில வாரங்களில் 30 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் கீழாகத் தொடங்கியது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த செப்.17ஆம் தொடங்கி வைரஸ் பாதிப்பு 2 நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது. இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 1697 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கொரோனா பாதிப்பு 1661ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,53,034 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,661 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 26,47,041 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த சில நாட்களாகவே 1.1 ஆகவே தொடர்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 1%ஆக உள்ளது. தஞ்சையில் 2.4% கோவையில் 2.1%ஆகவும் திருப்பூரில் 2%ஆகவும் உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 23 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக்கத் தஞ்சையில் 5 பேரும் நாகையில் நான்கு பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,360 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து 17 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது. நேற்று மாநிலத்தில் 16,969 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 16,984ஆக உயர்ந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,623 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,94,697 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 111 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+