குட் நியூஸ்.. 13,000க்கு கீழ் சென்ற கொரோனா.. ஆனால் இந்த 2 மாவட்டங்களில் கட்டுக்குள் வராத வைரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 24ஆவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் 12,772 பேருக்கு மட்டுமே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஊரடங்கு காரணமாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் 35 ஆயிரத்தைத் தாண்டிய வைரஸ் பாதிப்பு இப்போது 13 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

24ஆவது நாளாக இன்றும் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 14,016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 12,772 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாகும். இதுவரை மாநிலத்தில் 23,66,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,70,256 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

மேலும், மாநிலத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 146 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 108 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 29,801பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

தற்போது மாநிலத்தில் 1,36,884 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 489 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும். இதுதவிர கடந்த 24 மணி நேரத்தில் 25,561 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 21,99,808 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Array

Array

ஒரு கட்டத்தில் மிக மோசமான நிலையில் இருந்த தலைநகர் சென்னையில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 3ஆவது நாளாக அங்கு கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழாக உள்ளது. ஒரு நாளில் அங்கு 828 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாகக் கோவையில் 1728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை தவிர ஈரோட்டில் மட்டுமே வைரஸ் பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக (1295) உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+