தமிழகத்தில் 1800க்கு கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 100ஐ தாண்டிய கொரோனா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தொடர்ந்து 66ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 1785 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. இதையடுத்து நிலைமை கையை மீறி செல்லாமல் இருக்க மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் 66ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மொத்தம் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1785 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 94 சிறார்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 25,50,282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல மாநிலத்தில் இன்று 26 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 21 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள், 9 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை 33,937 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல தற்போது தமிழ்நாடு முழுவதும் 22,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர இன்று மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2,361 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,93,583 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்றும் கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 164 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோட்டில் 127 பேருக்கும் சென்னையில் 122 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சேலத்தில் 102 பேருக்கும் தஞ்சையில் 103 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகியுள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications