"இனிமேல்" பிரச்சனை வரலாம்.. கவனமா இருங்க! டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆர்டர்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

அறிக்கை

அறிக்கை

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது பொது மக்கள் சிலர் போன் செய்தும், சமூக ஊடகங்கள் மூலமும் புகார் அளித்தனர். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

காவல்துறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பெரும்பாலும் பிரச்சனை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் சின்ன பிரச்சனைகள், மோதல்கள் நடப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அந்த பிரச்சனைகளும் கூட உடனுக்குடன் நேரில் சென்று தீர்த்து வைக்கப்பட்டது. போலீசார் இந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தனர்.

டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

பல்வேறு ரேங்க் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கெல்லாம் மோதல்கள் ஏற்பட்டனவோ அங்கெல்லாம் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்கூட்டியே பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருந்தனர் . இதனால் பல இடங்களில் மோதல்கள், சச்சரவுகள் தவிர்க்கப்பட்டன.

கவனம்

கவனம்

ஆனால் தேர்தல் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதை போலீசார் நினைவில் கொள்ளவில்லை. இனிமேல்தான் சில இடங்களில் சில பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் கவனமாக இருக்க வேண்டும். தீவிரமாக ரோந்து பணிகளை செய்ய வேண்டும். உள்ளூர் அளவில் பிரச்சனையாக இருக்கும் பகுதிகளை கண்டறிய வேண்டும்.

 ரோந்து பணிகள்

ரோந்து பணிகள்

அடுத்த 3 நாட்கள் மிக முக்கியம். 1 லட்சம் போலீசார் தற்போது களத்தில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் பணிகள் முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும், என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு முன் கலவரம், அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிட கூடாது என்று அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+