கொரோனா பாதிப்பு நிலவரத்தை வைத்து.. தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மாவட்டங்களை 3 வண்ணங்களின் அடிப்படையில் பிரித்துள்ளதாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த வண்ணங்கள் குறித்து அரசு தகவல் ஏதும் குறிப்பிடவில்லை.

Recommended Video

    கொரோனா பாதிப்பு தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் லாக்டவுனை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு மாநில அரசு கட்டுப்படும் என முடிவு செய்துள்ளனர்.

    மாவட்ட வாரியாக

    மாவட்ட வாரியாக

    இந்த நிலையில் நேற்று மாலை தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை மாவட்டங்களை 3 வண்ணங்களின் கீழ் கொண்டு வரப்படும் என்றார். இந்த நிலையில் பொதுவாக மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கைகள் சாதாரணமாக வெளியிடப்பட்டு வந்தது.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகம் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய வண்ணங்களை கொண்டு பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தவே இந்த வண்ணங்களுக்குள் மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு நிறத்தின் கீழ் வந்துள்ளன.

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    அதாவது இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்பதை உணர்த்தவே இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 முதல் 20-க்குள் வருகிறது.

    பட்டியல் வைரல்

    பட்டியல் வைரல்

    அது போல் நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகள் மஞ்சள் நிறத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 விட குறைந்து காணப்படுகிறது. எனினும் அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+