தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்.. பள்ளி கல்வி துறை அதிரடி
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சென்னை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் நலன்கருதி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்...
இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டது.

என்ன காரணம்?
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் அப்போது எழுப்பப்பட்டன... சோஷியல் மீடியாவில் விவாதங்களும் இது தொடர்பாக எழுந்தன.. குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆர்எஸ்எஸ்சின் அஜென்டா இது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே ஒரு விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஸ்டாலின்
அதில், "இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக பள்ளிக்கல்வியை மேலும் மேம்படுத்தும்.. இந்த திட்டத்திற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையும், அவர்களது பங்களிப்பும் கல்வியாளர் குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிப்போர் மட்டுமே தன்னார்வலர்களாக தொடர அனுமதிக்கப்படுவர். வருகிற கல்வியாண்டில் 1 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தி இருந்தார்... முதல்வரின் இந்த விளக்கம் பல தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தன்னார்வலர்கள்
இதையடுத்து, பள்ளி முடிந்து மாலை நேரங்களில் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும், இது முழுக்க முழுக்க தரவுகள் மூலம் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறையும் அறிவித்தது.. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது.. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மையங்களுக்கு அனுப்ப வேண்டும்...

அன்பில் மகேஷ்
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில் திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்படும்.. ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கற்பிக்க 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்..
Recommended Video

அறிவிப்பு
குறிப்பாக, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications