Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா! வேகமாக அதிகரித்த தமிழக அரசு வருவாய்.. ஒரே ஆண்டில் இவ்வளவு உயர்வா! அமைச்சர் பிடிஆர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் 2022இல் ஏப்ரல் முதல் செப். வரையிலான வரவு செலவு ஆய்வு அறிக்கையை அமைச்சர் பிடிஆர் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அரசு தயார் செய்து கொடுத்த உரையை ஆளுநர் அப்படியே படிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.. நேற்றைய தினம் மாநிலத்தின் வரி வருவாய் குறித்த தகவல்களை அமைச்சர் பிடிஆர் பகிர்ந்து கொண்டார்.

 அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பிடிஆர்

2022-23 நிதியாண்டிற்குத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2022இல் ஏப்ரல் முதல் செப். வரையிலான முதல் ஆறு மாத கால வரவு செலவு தொடர்பாக ஆய்வு அறிக்கையை அமைச்சர் பிடிஆர் சட்டசபையில் தாக்கல் செய்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், மாநிலத்தின் வரி வருவாயும் மேம்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி இல்லாத வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. என்று 2022-23 வரவு செலவு திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 வரி வருவாய்

வரி வருவாய்

2022-23ஆம் நிதியாண்டில் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு, மத்திய அரசின் உதவி மானியங்கள் என அனைத்தையும் சேர்த்து மாநில அரசின் மொத்த வருவாய் 2. 31 லட்சம் கோடியாக உள்ளது.. குறிப்பாகக் கடந்த 2022 செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் 1.12 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2021-22இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மாநில அரசுக்கு 31.61% அதிக வருவாய் கிடைத்துள்ளது.

 அதிகரிப்பு

அதிகரிப்பு

அதேபோல பெட்ரோல், பத்திரப்பதிவு உள்ளிட்ட சில விஷயங்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் மாநில அரசு தனியாக வரி வசூலித்து வருகிறது. மாநிலத்தின் இந்த சொந்த வருவாய் 2022 ஏப்ரல் முதல் செப். வரையிலான காலகட்டத்தில் ரூ.72,441 கோடியாக இருந்தது. இதுவும் கடந்த 2021-22இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 36,92% அதிகமாகும்.. அதேபோல 2022 ஏப்ரல் முதல் செப். காலகட்டத்தில் வரி அல்லாத இதர வருவாய் 5,994 கோடியாக உள்ளது. இதுவும் கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 50.83% அதிகமாகும்.

 மீண்டு வருகிறது

மீண்டு வருகிறது

இப்போது அனைத்து பொருட்கள் மீதும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்கை ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு அளித்து வருகிறது. அதன்படி 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்காக 15,341 கோடி பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவும் 2021-22இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 44.58 % அதிகமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அந்தச் சூழல் மெல்ல மாறி வருவதையே இது காட்டுகிறது.

 செலவினங்கள்

செலவினங்கள்

செலவினங்களைப் பொருத்தவரை 2022-23 பட்ஜெட்டில் கணக்கிடப்பட்ட மொத்த வருவாய் கணக்கு செலவினம் 2.84 லட்சம் கோடியாக இருந்தது.. அதில் 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 1.16 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 40.93% ஆகும். கடந்த 2021-22 நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த செலவினம் 22.93% அதிகமாகும். சம்பளம், ஓய்வூதியம் அதிகரிப்பு மற்றும் வட்டி செலுத்துதல் காரணமாகவே இந்த செலவினங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திட்டத்திற்கு ஏற்ப உள்ளது

திட்டத்திற்கு ஏற்ப உள்ளது

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து நாம் மெல்ல மீண்டு வரும் நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை என்பதால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 2022-23 ஆண்டிற்கான முதல் ஆறு மாத வரவு செலவு திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்ப உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், திறமையான செலவின மேலாண்மை காரணமாக 2022-23 வரவு செலவு திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் வருவாய் செலவினங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வரிகள், மாநில கலால் வரி மற்றும் மோட்டார் வாகன வரிகள் அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+