Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் அனுமதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா 2ஆவது அலைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதையடுத்து மே மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா கேஸ்கள் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது.

பின்னர் படிப்படியாக தளர்வுகளுடன் ஏற்பட்டு தமிழகத்தில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் நீங்கின. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் பரவிய ஓமிக்ரான் தற்போது இந்தியா உளளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

ஓமிக்ரான்

ஓமிக்ரான்

இந்த புதிய வேரியண்ட்டால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, கோவா, டெல்லி, கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாட்களில் ஊரடங்கும் அமலாகியுள்ளன.

 இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு

அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலாகின. அதன்படி இரவு நேரத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

 31 மணி நேர ஊரடங்கு

31 மணி நேர ஊரடங்கு

அது போல் இன்று தமிழகத்தில் கிட்டதட்ட 6 மாதங்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகியுள்ளன. அதன்படி இன்றைய தினம் எவற்றுக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம். நேற்று இரவு10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை 31 மணி நேர ஊரடங்கு அமலாகியுள்ளது.

 முழு ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி

முழு ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி

  • உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி
    • உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி
      • இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை
        • இன்றும் வார நாட்களிலும் இரவு 10 முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி
          • உணவகங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம்
            • சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்ய அனுமதி
              • இன்று முழு ஊரடங்கின் போது திருமண நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி
                • திருமண அழைப்பிதழை காண்பித்து பயணஙகளை மேற்கொள்ள அனுமதி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+