கபசுர குடிநீர் குடிக்கலாம்.. கொரோனா குணமாகாது.. நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.. தமிழக அரசு
சென்னை: கபசுர குடிநீர் அருந்துங்கள். அப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை தடுக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கொரோனாவிலிருந்து தப்ப நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். இதையே தமிழக அரசும் கூறியுள்ளது.
இந்த கபசுர குடிநீர் விநியோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஆரோக்கியம் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள், போலீஸாருக்கு முதல்வர் பழனிச்சாமி கபசுரக் குடிநீரை வழங்கினார்.
கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம். இவை இரண்டும் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என தமிழக அரசு விளக்கியுள்ளது.
Recommended Video
சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரண பொட்டலங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications