அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

ஊழியர்கள் கோரிக்கை
அந்த வகையில் தீபாவளிக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், போனஸ் தொடர்பாக தொழிற்சங்கங்களை அழைத்து இன்னும் பேசவில்லை என கூறப்பட்டது. இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்கக் கோரி பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களிடம் கோரிக்கை வைத்து வந்தன.

அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கக் கூடாது. தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே போனஸ் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

தீபாவளி போனஸ்
இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் கருணைத் தொகை 1.67% என மொத்தம் 10% வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் 10%
சமீபத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அரசு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. தற்போது கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டு தீபாவளிக்கும் 10 சதவிகித தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications