வாடகை வீட்டை விடுங்க! புது வீடு கட்டுவோருக்கு வீட்டுமனைப்பிரிவு, கட்டிட அனுமதி பற்றி அரசு குட்நியூஸ்
சென்னை: வீட்டுமனைப் பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு இணையத்தளம் வழி முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பு என்ன?
ஊரகப் பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி (SELF CERTIFICATION) பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பு
அதன்படி, 2000 சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில் 31000 சதுர அடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு வரையுள்ள கட்டிடங்களுக்கு https://onlineppa.in.gov.in என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், வீட்டுமனைப் பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய வீடு கட்டுபவர்கள் அனுமதி பெறுவது தொடர்பான அரசு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
மனைப்பிரிவுகள்
அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், "ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு இணையத்தளம் வழி முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏனெனில், இதன் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய கட்டணத்தைச் செலுத்திய பின் உரிய ஆவணங்களை அளித்தால் ஒற்றைச் சாளர முறையில் உரிய அனுமதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், "மனைப்பிரிவு, கட்டடங்களுக்கான அனுமதியை இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும்" என அறிவித்துள்ளது.
சுயசான்று நடைமுறையின் நோக்கங்கள் ;
இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து கிராம ஊராட்சிகளிலும் SELF CERTIFICATION நடைமுறைப்படுத்த வேண்டுமென என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1. குடியிருப்பு கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துதல்.
2. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல்
3. கட்டிடத் திட்ட அனுமதிக்கான கட்டணத்தைச் செலுத்துவதை எளிதாக்குதல்,
4. ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளுதல்
5. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் இடைத்தரகர்களைத் தவிர்த்தல் மற்றும் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுய சான்று மூலம் அனுமதி பெறுதல்,
இந்த 5 ஆவணங்கள் முக்கியம்
1. பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம் (PDF வடிவத்தில்)
2. விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (Registered Sale Deed in favour of the applicant)
3. விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா in favour of thearylicant)
4. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவண (Approval Layout Document)
5. தள புகைப்படம். (Site Photograph)
சுய சான்று கட்டிட அனுமதி வழங்கிடும் பொருட்டு ஊராட்சிகளை வகைப்பாடு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படுள்ளது. மேற்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் web portal : https://onlineppa.in.gov.in என்ற இணையதளம் முகவரியில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றின் அடிப்படையில் கட்டிட அனுமதி SELF CERTIFICATION) பெற்றுகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications