Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரள வைக்கும் கொரோனா.. மீண்டும் தயார் நிலையில் கோவிட் வார்டுகள்.. தமிழக அரசு முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் வார்டுகளை முறையாக பராமரிக்கவும் தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல், படுக்கைகள் தயார், மாஸ்க், சமூக இடைவெளி, தினசரி கொரோனா பாதிப்பு, தடுப்பூசி, ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட வார்த்தைகளை பீதியுடனும் அச்சத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டு ரொம்ப மாதங்கள் ஆகிறது. கொரோனா இந்தியாவை விட்டு இன்னும் போகவில்லை என்றாலும் அச்சமூட்டும் படியாக தரவுகள் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மேற்கண்ட வார்த்தைகளை திரும்ப கேட்கும் நிலை வந்துள்ளது. ஓமிக்ரானின் புதிய திரிபான பிஎப் 7 எனும் கொரோனா வைரஸ் சீனா, ஹாங்காங், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

ஜீரோ கொரோனா பாலிசி

ஜீரோ கொரோனா பாலிசி

சீனாவில் ஜீரோ கொரோனா பாலிசி என்பதை கடைப்பிடிக்க கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்தன. அதாவது ஒருவருக்குக் கூட கொரோனா இல்லாத நிலையை அடைய சீன அரசு இத்தகைய கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

சீன அரசு

சீன அரசு

இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு விலக்கிக் கொண்டது. மக்கள் 2019ஆம் ஆண்டுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அப்படி இருந்தார்கள்.. வந்தது வினை.. தற்போது புதிய வேரியண்ட் வேகமாக பரவி வருகிறது. இடுகாடுகளில் சடலத்தை நல்லடக்கம் செய்ய காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் கொரோனா நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.

4 பேருக்கு பரவல்

4 பேருக்கு பரவல்

இந்த நிலையில் இந்தியாவிலும் 4 பேருக்கு புதிய ஓமிக்ரான் வேரியண்ட் பரவியுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் எனப்படும் கொரோனா சோதனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மக்களவையில் கூறுகையில் உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறித்து இந்தியா உன்னிப்பா கவனித்து வருகிறது.

கட்டாய முகக் கவசம்

கட்டாய முகக் கவசம்

பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் போட்டு அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மத்திய அமைச்சர் மன்சுக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா வார்டுகள்

கொரோனா வார்டுகள்

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவற்றில் ஆக்ஸிஜன் வசதியும் செய்யப்பட்டன.

10 ஆயிரம் படுக்கைகள்

10 ஆயிரம் படுக்கைகள்

பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டன. தேசிய சுகாதார இயக்க நிதியில் 2500 க்கும் மேற்பட்ட அதிநவீன படுக்கை வசதிகளும் முக்கிய மருத்துவமனைகளில் செய்யப்பட்டன. இவ்வாறு அரசு மருத்துவமனைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

கொரோனா பரவல் குறைந்த நிலையில் அவை மற்ற சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் கொரோனா வார்டுகள் பயன்பாடின்றி மூடப்பட்டுவிட்டன. சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா வார்டுகளை பராமரிக்க உத்தரவு

கொரோனா வார்டுகளை பராமரிக்க உத்தரவு

இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பூட்டிக் கிடக்கும் கொரோனா வார்டுகளை பராமரிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக மாற்று சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா வார்டுகளும் பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+