ஓகே சொன்ன ஆளுநர்.. தொழிலாளர்களே! இனி இதெல்லாம் உங்க உரிமை - வெளியான அரசாணை.. குடிநீர் டூ ரெஸ்ட் ரூம்
சென்னை: தொழிலாளர் நலனுக்கான பணியிடத்தில் இருக்க வேண்டிய வசதிகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழ்நாடு மாநிலச் சட்டப்பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு மே திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 20/2023. 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறுந்தலைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் 22-A 22-B, 22-C, ஆம் பிரிவுக்கு பின்பு, பின்வரும் பிரிவுகளானவை உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
"22-B. குடிநீர் - பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், கடை அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும், வசதியாக அமைந்துள்ள பொருத்தமான இடங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயனுள்ள ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
22-C. கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்.- பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகிறவாறு, போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீர்க் கழிப்பிடங்களை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும். அவை பணிபுரியும் நபர்களுக்கு வேலை நேரத்தின் அனைத்து நோங்களிலும், அணுகக்கூடியவாறு மிகவும் வசதியானதாக அமைந்திருத்தல் வேண்டும்.
22-D. ஓய்வறை மற்றும் உணவறை. - (1) பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், பணிபுரியும் நபர்களுக்காக, குடிநீர் வசதியுடன் கூடிய போதிய மற்றும் பயனுள்ள ஓய்வறை மற்றும் உணவறையினை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்.
(2) ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருத்தல் வேண்டும் மற்றும் அவை சுத்தமாகவும் சீரொழுங்காகவும் பராமரிக்கப்படுதல் வேண்டும்.
(3) ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய நாற்காலிகள் அல்லது சாய்வு இருக்கைகளுடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
22-E. முதலுதவி.- பணியமர்த்துநர் பணியமர்த்துதர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகிறவாறான முதலுதவி வசதிகளை பணியுரியும் இடத்தில், ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications