தமிழக அரசின் புதிய விண்வெளி கொள்கை! ஸ்பேஸ் பே ஆகும் 4 மாவட்டங்கள்! வெளியானது முக்கிய அறிவிப்பு
சென்னை: விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 வெளியாகியுள்ளது. மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த கொள்கையில் வகுக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசப கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. தொழில் மற்றும் முதலீட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது தமிழ்நாடு தானியங்கி மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, கனரக இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருள் உள்ளிட்ட துறைகளில் சிறந்த வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சிறந்த தொழில்மயமான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருவதன் தொடர்ச்சியாக மேலும் இந்த துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிக அளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழக விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.
மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த கொள்கையில் வகுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் புதிய கொள்கையின் கீழ் குலசேகரபட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர் , தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுப்படுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வளர்ச்சிகள், சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழக அரசு அறிமுகம் செய்கிறது.
வலுவன தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழிலம்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழில்துறையினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மூக்கில் ஆபரேஷன் செய்ய போய் உயிரிழந்த சீதாலட்சுமி! அரசு தந்த இலவச வீட்டு மனை பட்டா! நெகிழ்ந்த சகோதரி -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications