சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் கொரோனா- தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இருக்கக் கூடிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையை இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் தங்கள் வசதிக்கேற்ப சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tamilnadu Government says Corona in Health insurance for government staffs

அங்கு சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு வரையறுத்துள்ளது. மேலும் தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்- விண்வெளி துறையில் தனியார் மயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்- விண்வெளி துறையில் தனியார் மயம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டத்திலும் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனமே செலுத்தும். ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government encloses corona treatment for Government employees and Retired employees in their health insurance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X