தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? revised fare குறித்து தமிழக அரசு சொன்னது என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்குமாறு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடுமாறு கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக தொழிற்சங்கங்கள், டிரைவர்கள், நுகர்வோர் அமைப்புகளிடம் கருத்துகளைப் பெறுவதற்காக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசுக்கு வழங்கிய பரிந்துரை பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் ஆட்டோ கட்டணம் காரணமாக பாதிக்கப்படுவோர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications