தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற ஆப்பில் விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற TNSED Schools என்ற பள்ளிக் கல்வித்துறையின் ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இலவச கல்வி, மதிய உணவுடன் தற்போது காலை உணவும் வழங்கப்படும். அது மட்டுமின்றி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவச பேருந்து வசதியும் தரப்படுகிறது . ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, இந்த இலவச பஸ் வசதி அவர்களின் சொந்த ஊர்களுக்கு நகர்ப்புறங்களில் இருந்து சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அமைத்து தரப்பட்டுள்ளது.. அதேபோல, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பபடுகிறது.
இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி கனவை நினைவாக்குது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் தான். இது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி மும்முரமாகி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற TNSED Schools என்ற பள்ளிக் கல்வித்துறையின் ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறியுள்ளதாவது: " அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை செயலியில் நுழைந்து பள்ளி விவரம், மாணவர் பெயர், எந்த வகுப்பு, முகவரி, பஸ் வழித்தட எண், மாணவர் பஸ் ஏறும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களை வகுப்பு ஆசிரியர் பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் சமீபத்திய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களின் பதிவுகளை சரிபார்த்து அனுமதி அளிக்க வேண்டும் " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications