தமிழக அரசின் சூப்பர் திட்டம்.. 27 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கிடைக்க போகுது.. எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரசு கலை கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பி உள்ளன. தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் 27 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இளங்கலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தி தான் மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருவேளை மீதி காலி இடங்கள் இருந்தால் நேரடி கலந்தாய்வு மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை செய்யப்படும். அப்படித்தான் இந்தமுறை கல்லூரிகளில் மாணவ மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரசு கலை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 416 இடங்கள் நிரம்பி உள்ளன. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து இருக்கிறார்கள்.
இந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 416 பேரில், 45 ஆயிரத்து 409 மாணவர்கள், 56 ஆயிரத்து 7 மாணவிகள் ஆவார்கள். அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகிறார்கள்.
அதன்படி, அரசு கலை கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் 56 ஆயிரத்து 7 பேரில், 27 ஆயிரத்து 608 மாணவிகள் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
புதுமை பெண் திட்டம் என்றால் என்ன? யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்து தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் புதுமைப் பெண் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி ஏழை பெண்கள் உயர் கல்வி படித்தால் மாதம் 1000 ரூபாய் நிச்சயம் கிடைக்கும்.
முன்னதாக இந்த திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் வேறு மாதிரி இருந்தது... எப்படி என்றால், திருமணம் ஆகும் அப்பெண்ணின் கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 25 ஆயிரம், 50 ஆயிரம் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. இதன்படி 4 கிராம், எட்டு கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த திட்டத்தை அடியோடு மாற்றியது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் உயர்கல்வி பயில வேண்டும் நோக்கில் திட்டத்தை மாற்றியது. இதன்படியே 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால் அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வங்கிகணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் காரணமாக அரசு பள்ளி மாணவிகள் பலர் உயர்கல்வி சேர்ந்துள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தான் இந்த ஆண்டு 27000 மாணவிகளுக்கு 1000 ரூபாய் கிடைக்க போகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications