கடுமையான அபராதம், சிறை.. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்பதல்!
சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலர் பணத்தை இழப்பதும், இதனால் சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்ட சம்பவங்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.

சென்னை ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் இந்த அதிரடி முடிவு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதன் காரணமாக இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். விளையாடும் நபர்களின் போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்படும்.
அரங்கம் இன்றி தனியாக விளையாடும் நபர்களுக்கு ரூ.5000 அபராதமும், 6 மாதம் சிறையும் விதிக்கப்படும், என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications