Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பட்ஜெட் தாக்கலாகும் நேரம் பார்த்து.. ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணத்தால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய போதிலிருந்தே இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது.

Tamilnadu Governor R.N.Ravi heading to Delhi amid Tamil nadu Budget to be presented

இதைத் தொடர்ந்து பல முக்கிய மசோதாக்களின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும் துணை வேந்தர் நியமன மசோதாவையும் நிறைவேற்றாமல் இருப்பதாக தமிழக அரசு குற்றச்சாட்டிய நிலையில் நீலகிரியில் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தி வைத்தார்.

மேலும் துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கெனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், அதை தமிழக அரசு கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை கொண்டு குழுவை மாற்றி அமைத்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குரல் கொடுத்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆளுநரை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியும் கடுமையாக விமர்சித்தது.

எந்த ஒரு திட்டத்தையும் தமிழக மக்களுக்கு போய் சேரவிடாமல் ஆளுநர் தடுப்பதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த பட்ஜெட் தாக்கலின் போது ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அப்போது அந்த உரையில் இருந்த பெரும்பாலானவற்றை ஆளுநர் ரவி தவிர்த்துவிட்டு தனது சொந்த கருத்துகளையே படித்திருந்தார்.

பொதுவாக தமிழக அரசு எழுதி கொடுக்கும் உரையை படிக்க வேண்டியதுதான் ஆளுநர்களின் கடமை. ஆனால் அவர் அந்த உரையில் இருந்த சமூகநீதி, அமைதிப்பூங்கா, பெரியார், அம்பேத்கர், காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை படிக்காமல் விட்டுவிட்டார். அந்த உரையில் 65 ஆவது பத்தியை சுத்தமாக தவிர்த்துவிட்டார்.

இதெல்லாம் பெரிய சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் கடந்த 12 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ரவி, உரையை முழுவதுமாக படிக்காமல் புறக்கணித்துவிட்டார். ஆளுநர் உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதாலும் இந்த ஆளுநர் உரையில் உள்ள சில கருத்துகளுக்கு தான் உடன்படாததாலும் ஆளுநர் உரையை படிக்க விரும்பவில்லை என கூறியிருந்தார்.

இதையடுத்து ஆளுநர் படிக்காத உரையை சபநாயகர் அப்பாவு படித்ததும் சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை ஆளுநர் அவர்கள் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயர்களையும் அப்பாவு பயன்படுத்தியதால் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து ஆளுநர் உரையை தவிர்த்தது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது ஆளுநரின் சிறுபிள்ளைத்தன செயலுக்கு பயந்துவிட மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்படுகிறது. இந்த சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் . ஆளுநர் உரை புறக்கணிப்பு, பட்ஜெட் தாக்கலுக்கு மத்தியில் 4 நாட்கள் பயணமாக அவர் டெல்லி விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+