தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
சென்னை: தமிழக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டபோதும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது என்பது அரசு மருத்துவர்களின் புகார்.

ஆகையால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் நடத்தி வந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அரசுத் தரப்பிலும் மருத்துவர் சங்க பிரதிநிதிகளுட ன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் பணிமுறிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அத்துடன் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு கெடு விதித்தது.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்துள்ளார், தங்களை கடவுளுக்கு இணையாக பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை தாங்கள் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications