Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றுத்திறன் தம்பி, தங்கைகள் கவனிக்கும் பெண்! வீட்டிற்கே சென்று அரசு பணி ஆணை வழங்கிய ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல் பராமரித்து வரும் இளம் பெண்ணுக்குத் தமிழக அரசு உதவி உள்ளது.

பொதுவாக அரசுப் பணிகளில் வேலை செய்பவர்கள் மரணம் அடைந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தில் இருந்து ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

அதேபோல மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்.

 தமிழக அரசு

தமிழக அரசு

அவர்களுக்கு நிரந்தரமாக வருமானம் வழங்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல அரசுப் பணி கொடுக்கப்படும். அப்படி தான் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல் பராமரித்து வரும் இளம் பெண்ணுக்குத் தமிழக அரசு உதவி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையைப் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 இளம் பெண்

இளம் பெண்

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏ.சுகுணா என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மூன்று தம்பிகளும், ஒரு தங்கையும் வசித்து வருகின்றனர். இந்த 4 பேருமே மாற்றுத் திறனாளிகள் ஆவர். அவர்கள் அனைவரையும் சுகுணா தான் திருமணமே செய்யாமல் பராமரித்து வருகிறார். இது தொடர்பாகச் சமீபத்தில் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருந்தது..

 நிரந்தர வருமானம்

நிரந்தர வருமானம்

இதனைத் தொடர்ந்து அவர்களைக் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, இவர்களுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உதவி கிடைப்பதாகத் தெரிய வந்தது. இதையடுத்து என்ன மாதிரியான உதவி தேவை என்று கேட்டுள்ளனர். அதற்கு ஏதாவது நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளனர்.

 தமிழக அரசு

தமிழக அரசு

இதையடுத்து அந்த பெண்ணுக்குக் கூட்டுறவு வங்கியில் துணை ஊழியராகப் பணி ஆணையும், வங்கியின் பொதுநல நிதியிலிருந்து ரூ.20,000/ வரைவோலையும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நலிந்தோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இவரது சகோதர சகோதரிகளுக்கு மாற்றுத் திறனாளி உதவித் திட்டம் கிடைத்து வருகிறது.

 அரசுப் பணி ஆணை

அரசுப் பணி ஆணை

எனவே ஒரு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் அயற்பணி முறையில் துணை ஊழியராகப் பணி ஆணையும், வங்கியின் பொதுநல நிதியிலிருந்து ரூ.20,000/-க்கான வங்கி வரைவோலையுடன், மூன்று சீருடைகளும் வழங்கப்பட்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 வீட்டிற்கு சென்ற ஜெ. ராதாகிருஷ்ணன்

வீட்டிற்கு சென்ற ஜெ. ராதாகிருஷ்ணன்

முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள சுகுணா இல்லத்திற்கே நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து அவருக்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+