"உலக தமிழர்களை இணைத்த கீழடி.." நாட்டில் அகழாய்வுக்கு அதிக நிதி தருவது தமிழகம் தான்- தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் நிலையில், அகழாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த உரையைத் தமிழில் சபாநாயகர் அப்பாவு படித்தார்.

இதற்கிடையே இன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அகழாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ் நூல்கள்: இது தொடர்பாக தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில், "கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை விட இந்த இரண்டு ஆண்டுகளில் அதிக நூல்களை மொழிபெயர்க்க அரசு முன்முயற்சி எடுத்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெர்ய்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 600 புதிய புதிய நூல்கள் வெளியிடப்படும்
சௌராஷ்ட்ரா, வடுகு மொழிகளையும் தோடர், நரிக்குறவர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் எதிர்கால தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில் இனவரைவியல் - ஆவணப்படுத்திப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும்.
அகழாய்வு: கீழடி என்ற ஒற்றை சொல் உலக தமிழர்களை ஒன்றிணைத்து. வைகை கரையில் சங்க காலத்தில் செழித்து இருந்த நகர நாகரிகம் தொல்லியல் அகழாராய்ச்சி மூலம் கொண்டு வரப்பட்டதை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் கொண்டாடியது
தமிழரின் நீண்ட நெடிய பண்பாட்டு மரபை மொழி, வரலாறு, அறிவியல் துணை கொண்டு சான்று அடிப்படையில் அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளும் வகையில் உறுதியாக நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிக நிதி: 2024-25 சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். பண்டை தமிழர்களின் காலச்சுவட்டைத் தேடி மற்ற மாநிலங்களில் உள்ள பல இடங்களிலும் அகழாய்வு செய்யப்படும். இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அகழாய்வு பணிகளுக்காக நாட்டிலே இவ்வளவு அதிக நிதியைத் தமிழக அரசு தான் வழங்கி வருகிறது" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications