மொத்தமாக மாற போகுது.. சென்னை பீச்சுகளுக்கு "மாஸ்டர் பிளான்.." சத்தமின்றி ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் மூன்று முக்கியமான கடற்கரைகளைச் சீரமைக்கச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் பொழுது போக்கிற்கு பல இடங்கள் இருந்தாலும் அதில் பலருக்கும் முக்கிய சாய்ஸ்ஸாக இருப்பது என்னவோ கடற்கரைகள் தான். வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் கடற்கரைகளில் கூடும் கூட்டமே இதற்குச் சாட்சி.

 Tamilnadu govt is planning to restoring three Chennai beaches in its mega renovation plans

கடற்கரையின் பிரம்மாண்டம், அங்கு வீசும் ரம்மியமான காற்று ஆகியவை அனைவரையும் எளிதாக வசீகரித்துவிடும். இதுவே அங்கு மக்கள் படையெடுத்துச் செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது.

சென்னை பீச்சுகள்: மேலும், பட்ஜெட் விலையில் குடும்பத்துடன் வெளியே சென்று வர ஏற்ற இடமாகவும் பீச்கள் உள்ளன. படம், மால், பொழுதுபோக்கு பூங்கா என எங்குச் சென்றாலும் போய் வர செலவு, டிக்கெட் செலவு பார்க்கிங் செலவு, உணவுக்குத் தனி செலவு என்று எகிறிக் கொண்டே இருக்கும். ஆனால், பீச்சுகளில் அப்படி இல்லை.. குறைவாகவே செலவாகும். இப்படி பட்ஜெட் செலவில் பொழுதைப் போக்க ஏற்ற ஒரு இடமாக பீச்சுகள் இருக்கிறது.

அதேநேரம் இப்போது சென்னையில் இருக்கும் பல பீச்சுகளில் முறையான பராமரிப்பு இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு பீச்சிற்குச் சென்றாலும் குப்பைகள் நிரம்பியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கிறது. இவை கடல் வாழ் உயிரினங்களையும் சரி, கடலையும் சரி மோசமாகப் பாதிக்கும் ஆபத்தும் இருக்கிறது. இதனால் கடற்கரைகளை மறுசீரமைப்பது இப்போது ரொம்பவே முக்கிய தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசு: இதற்கிடையே தமிழ்நாடு அரசு இதற்கான நடவடிக்கைகளை இப்போது ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று பீச்சுகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம், எண்ணூர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளைச் சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்யச் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

 Tamilnadu govt is planning to restoring three Chennai beaches in its mega renovation plans

அதன்படி முதலில் இந்த பீச்சுகள் மறுசீரமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நடக்க ஏதுவாக கடற்கரைகளில் பாதைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், கடற்கரைகளைப் பசுமையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் ஆர அமர உட்கார்ந்து பொழுதைக் கழிக்கவும் தேவையான சீட்டிங் ஏற்பாடுகள் செய்யப்படும். குப்பைகளைப் போட ஏதுவாகப் பீச்சில் பல இடங்களில் தேவையான குப்பைத் தொட்டிகள் ஏற்படுத்தப்படும்.

முக்கிய அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் தூய்மைப்படுத்தி, மறுசீரமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அறிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாகவே முதற்கட்டமாக இந்த மூன்று கடற்கரைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+