தீபாவளிக்கு 7200 பட்டாசு கடைகள்.. ரூல்ஸ் மீறினால் லைசென்ஸ் ரத்து.. தமிழக அரசு வார்னிங்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு 7,200 பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

களைகட்டும் தீபாவளி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு 7,200 பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பட்டாசு: வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்பனை செய்ய விரும்புபவர்கள் தீயணைப்புத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். அந்த வகையில் கடந்த 10 நாட்களாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் அந்தந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் வழங்கி வந்தனர்.
உச்சநீதிமன்றம்: பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கடைகள் அமைக்க வேண்டும். கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகள் தீயணைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த 30 விதிகளை முறையாக பின்பற்றி பட்டாசு கடைகள் அமைக்க முன் வரும் நபர்களுக்கு மட்டுமே கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என தீயணைப்பு துறை தெரிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பத்தில் பட்டாசு கடைகள் அமைக்கும் இடத்திற்கு தீயணைப்பு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
7200 கடைகளுக்கு அனுமதி: தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு கடைகள் அமைப்பதற்கான மனுக்கள் மாவட்ட வாரியாக பெறப்பட்டன. அதனை தீயணைப்பு அலுவலர்கள் ஆய்வுக்கு பிறகு பாதுகாப்பு கருதி மொத்தம் 7,200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் மட்டும் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை ஆய்வு செய்த பிறகு 890 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
நேரக்கட்டுப்பாடு: அதேநேரத்தில் தமிழக அரசும் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரக்கட்டுப்பாடுகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமுறைகள்: பட்டாசு கடைகள் முறையாக விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அப்படி விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசு கடைகள் மீது புகார்கள் வந்தால் உடனே பட்டாசு கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று தீயணைப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏதேனும் தீ விபத்து நடந்தால், அவற்றை தடுக்க 42 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மாவட்டங்களில் இருந்து 26 வாகனங்கள் சென்னைக்கு வரழைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள்: தமிழ்நாடு முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னையில் 900 பேர் பணியில் ஈடுபடுவார்கள். வரும் 11 முதல் 13ம் தேதி வரை தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அதற்கான உத்தரவுகளை தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 500 கடைகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் 6,563 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications