அடடே செம.. மொத்தம் 397 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி.. இங்கும் மாணவர்களை விட மாணவிகளே பெஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் மிக சிறப்பாக இருக்கிறது. +2 அரசு பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.. அதன்படி இந்தாண்டு +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வு வரை நடைபெற்றது.

மொத்தம் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள்களைத் திருத்தும் பணி தொடங்கியது. 83 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணிகள், ஏப்ரல் 13ஆம் தேதி நிறைவடைந்தது.
தேர்வு முடிவுகள்: அதைத் தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. இன்று மே 6ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், லோக்சபா தேர்தல் காரணமாகத் தேர்வு முடிவுகள் தாமதமாகலாம் எனத் தகவல் பரவியது. இருப்பினும், திட்டமிட்டபடி மே 6இல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது.
+2 தேர்வு முடிவுகள் 2024: மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி! 2478 அரசு பள்ளிகளில் 100% பாஸ்
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியானது. dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய தளங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.. அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து செக் செய்து கொள்ளலாம்.. மேலும், EMIS இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.
அரசு பள்ளிகள்: இந்தாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வு எழுதியவர்களில் 7.19 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்ச்சி விகிதம் 94.56% ஆக இருக்கிறது. இந்த தேர்வில் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையே கொடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் 7532 மேல்நிலை பள்ளிகள் இருக்கும் நிலையில், 2478 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதில் குறிப்பாக 397 பள்ளிகள் அரசு மேல்நிலை பள்ளிகளாகும்.. மேலும், பள்ளி வாரியாக தேர்ச்சி சதவிகிதம் எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி: அதன்படி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.02%ஆக இருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 95.48%ஆக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மொத்தம் 3.34 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 3.04 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.81 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 1.73 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.93%ஆக இருக்கிறது. அதேநேரம் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.09%ஆக இருக்கிறது. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.58%ஆகவும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.69%ஆக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications