சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே.. தலைமை ஆசிரியர் பேஸ்புக் பதிவு! சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியுமா?
சென்னை: சாதி சான்றிதழ் காரணமாகவே சாதி இருப்பதாகவும், பள்ளிகளில் இடஒதுக்கீட்டுக்காக சாதி கேட்பதால் மாணவர்கள் மத்தியில் சாதி பரவுவதாக பலர் கூறி வரும் நிலையில், அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து உள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் ஜெயராஜ் முத்துவேல். இவர் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள பதிவில், "நீதி அரசர் சந்துரு தலைமையிலான, பள்ளிகளில் சாதிய வேறுபாடுகளை களைவதற்கு வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு மக்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.

இந்த செய்தியை மின்னஞ்சல் முகவரியோடு எனது வாட்ஸ் அப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன் அதற்கு பதில் அளித்திருந்த ஒரு தம்பி ஒரு அபாரமான யோசனையை கூறியிருந்தார் அவரது யோசனையையும் அதற்கு என்னுடைய பதிலும் கீழே கொடுத்துள்ளேன்.
"பள்ளி சான்றிதழில் குறிப்பிடக் கூறுவதே அரசு தான் அதைத் தடுத்தால் யார் எந்த சாதி என்பதே தெரியாமல் போகும் அனைவரும் ஒன்றாக இருப்பர்."
சிறுபிள்ளைத்தனமான சிந்தனை!!
சாதிச் சான்றை வைத்தா சாதியை கண்டுபிடிக்கிறார்கள்?!!
எந்த ஊர்?!
எந்த தெரு?!
அந்த ஊர்ல அவர் உனக்கு என்ன முறை ஆவுது?!
வடக்கே சாதியை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள், சர் நேம் போதும்!!
வகுப்புவாரியாக அதிகாரம் பகிர்ந்தளிக்கவும் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை சாதி வாரியான மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ற அளவில் வழங்கிடவும் நிச்சயமாக ஜாதி சான்றிதழ் அவசியம் மேலும் ஜாதி சான்றிதழ் ஒன்றை மட்டுமே இங்கே அடிப்படையாக வைத்து யாரும் சாதியை மதிப்பிடுவதில்லை ஏன் திருமணத்தில் கூட யாரும் சாதி சான்றிதழ் கேட்பதில்லை!!
ஒருவரை சாதி ரீதியாக அடையாளப்படுத்த சாதி சான்றிதழ் என்பது நிச்சயமாக அவசியமில்லை!! மாறாக ஒருவர் தனக்கான உரிமையும் வாய்ப்பையும் பெற்றிட ஜாதி சான்றிதழ் நிச்சயம் அவசியமானது.
வகுப்பு வாரியாக விகிதாச்சார அடிப்படையிலான அதிகாரமும் வேலை வாய்ப்புகளும் பகிர்ந்து அளிக்கப்படும் வரை சாதி சான்றிதழும் இட ஒதுக்கீடும் நிச்சயம் அவசியம்!! ஜாதி சான்றிதழை கிழித்துப் போட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்பது தினமலர் காரன் கிளப்பிவிட்ட சிந்தனை!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்டு மாதம் தலித் மாணவனை வீடு புகுந்த சக மாணவர்களே சாதி வெறியால் கொலை வெறியுடன் வெட்டிய சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகள் சாதி வேறுபாடுகளை ஒழிக்கும் வழிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைத்தது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் காவல் துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் செயல்படும். ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க ஏதுவான குறைதீர் அமைப்பை உருவாக்க, தக்க வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர், சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறுவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications