"முக்கிய மாற்றம்.." மொத்தம் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது உண்டு. நிர்வாக காரணங்களுக்காக இதுபோல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கிடையே இப்போது பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் முக்கியமாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் துறைக்கு இப்போது தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலராக இருந்த ஜெகன்நாதன் இப்போது வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வீட்டு வசதி & நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜிலேன்ஸ் கமிஷனராக இருக்கும் கோபால், தற்போது கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக இருக்கும் ரமேஷ்சந்த் மீனா திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தமிழ்நாடு காதி கிராப்ட் எம்.டி.யாக இருந்த சோபனா இப்போது அச்சு & எழுதுபொருள் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் இருந்த கவிதா ராமு இப்போது தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
