தன்னிறைவு பெற போகும் சுகாதாரத்துறை.. பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு.. பிடிஆர் பளீச் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க போவதாக தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கிய போது எங்கே நிலைமை மிக மோசமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற 20-25 நாட்களிலேயே கொரோனா பரவலை திமுக அரசு கட்டுப்படுத்தி உள்ளது. தற்போது கொரோனா கிராப் கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சரிய தொடங்கி உள்ளது.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

முக்கியமாக ஆக்சிஜன்கள், பெட்கள் என்று தமிழக அரசு முறையாக திட்டமிட்டு அனைத்தையும் ஏற்பாடு செய்தது. சரியான திட்டமிடல் காரணமாக பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அதிலும் கடந்த 20 நாட்களில் உருவாக்கப்பட்ட புதிய ஆக்சிஜன் படுக்கைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் என்று தமிழக அரசு கொரோனா பரவலை சிறப்பாகவே எதிர்கொண்டுள்ளது.

 கட்டமைப்பு

கட்டமைப்பு

ஆனாலும் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழக அரசு மருத்துவ துறையில் இப்போதே தன்னிறைவு பெறும் முடிவில் உள்ளது. படுக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி என்று அனைத்திலும் பிறரை சாராமல் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழக அரசு இருக்கிறது. வேக்சின் உற்பத்தியிலும் தனிப்பட்ட வகையில் தன்னிறைவு பெறும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது.

கூடுதல் நிதி

கூடுதல் நிதி

இதை மனதில் வைத்து தமிழகத்தில் திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க போவதாக தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பு

தயாரிப்பு

தமிழ்நாட்டில் நிரந்தரமாக மருந்து தயாரிப்பு ஆலைகளை கட்டுவது. கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது. அனைத்து சுகாதார துறைகளிலும் தன்னிறைவு பெறுவது என்று பல திட்டங்களை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இயற்கையாக குறையவில்லை.

கஷ்டம்

கஷ்டம்

தமிழ்நாட்டு அரசின் முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடு காரணமாகவே கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் வரும் பட்ஜெட்டிலும் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பிடிஆர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசு ஏற்கனவே வேக்சின் உற்பத்தியில் குதிக்கும் திட்டத்தில் ஒரு பக்கம் உள்ளது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

அதேபோல் மூன்றாம் அலை ஏற்பட்டாலோ அல்லது வேறு விதமான பெருந்தொற்றுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டாலோ அதற்கும் சேர்த்தே தயார் ஆகும் வகையில் தமிழ்நாட்டு அரசு திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அதன்படியே தற்போது தமிழ்நாட்டு பட்ஜெட்டில் சுகாதாரதுறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+