இவ்வளவு மழையா.. அதுவும் காயல்பட்டினத்தில்! தென் மாவட்டங்களை புரட்டி எடுத்த 6 மணி நேரம்.. ரெக்கார்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை இப்போதுவரை விடாமல் பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு வெப்பநிலை, காற்றின் வேகம், மற்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறாது என்று வானிலை ஆய்வு மையம் பின்பு தெரிவித்தது.
இதனால் இது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கும், ஆனாலும் இதனால் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதோடு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தற்போது ஒரே இடத்தில் மையம் கொண்டு இருக்கும் தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கனமழை
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு இடத்தில் லாக் ஆகி கனமழையை கொடுக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படியே எங்கும் நகராமல் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு தீவிர மழையை தென் மாவட்டங்களில் கொடுத்தது. நேற்று காலை தூத்துக்குடி, நெல்லையில் தொடங்கிய கனமழை இப்போதும் விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.

6 மணி நேரம்
முக்கியமாக நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை புரட்டி எடுத்து இருக்கிறது. அதன்பின் இரவு 12 மணியில் இருந்து இன்று காலை 6 மணி வரை மீண்டும் மழை தீவிரமாக பெய்தது. காயல்பட்டினம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், ஒட்டபிடாரம், மணியாச்சி, கடம்பூர், வேதநத்தம், எட்டயபுரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது.

காயல்பட்டினம்
அதிலும் காயல்பட்டினத்தில்தான் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. அங்கு நேற்று காலையில் இருந்து இன்று காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 306 மிமீ மழை பெய்துள்ளது. இது அங்கு பெய்த மிக அதிக மழையாகும். இதன் மூலம் காயல்பட்டினத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போன்று காட்சி அளிக்கிறது. ஆறுகளில் நீர் நிரம்பி வெள்ளம் போல ஓடிக்கொண்டு இருக்கிறது. 6 மணி நேரத்தில் இங்கு 150 மிமீக்கும் அதிகமான மழை நேற்று காலை பெய்தது.
Recommended Video

தூத்துக்குடி
தூத்துக்குடி 266.60 மிமீ மழையை நேற்று பெற்றது. திருச்செந்தூர் 248 மிமீ மழையை கடந்த 24 மணி நேரத்தில் பெற்றது. அதிலும் நேற்று காலை 6 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 175 மிமீ மழை பெய்துள்ளது, ஸ்ரீவைகுண்டம் 179மிமீ, குலசேகரப்பட்டினம் 158 மிமீ, சாத்தான்குளம் 121மிமீ, ஒட்டபிடாரம் 121மிமீ, மணியாச்சி 87மிமீ, கடம்பூர்90 மிமீ, வேதநத்தம் 80 மிமீ, எட்டயபுரம் 78 மிமீ, கோவில்பட்டி 71 மிமீ அளவு மழை பெய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications