"அந்த" பதவிக்கு.. இப்பவே துண்டு போடும் பாஜக.. தடுக்க பார்க்கும் திமுக? அடுத்து என்ன நடக்குமோ?!
சென்னை: கோவில் அறங்காவல் குழு உறுப்பினர் நியமனம் தொடர்பான பிரச்சனை வரும் நாட்களில் தமிழ்நாடு அரசியலில் பெரிதாக வெடிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரதத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றத்தில் இருந்து பல்வேறு துறைகள் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான துறை என்றால் அது இந்து சமய அறநிலையத்துறைதான். பல ஏக்கர் கணக்கான, நிலங்கள், தங்கங்களை மீட்டது தொடங்கி கோவில் நகைகளை உருக்கி முதலீடு செய்தது வரை அரசு பல நலத்திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறையில் கொண்டு வந்தது.
எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் கூட இந்து சமய அறநிலையத்துறைக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் சுமார் 44, 500 கோயில்கள் பெரிதும் சிறிதுமாக இருக்கின்றன.

இந்து சமய அறநிலையத்துறை
இந்த நிலையில் இந்த கோயில்களின் அறங்காவல் குழு உறுப்பினர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. உறுப்பினர்களை நேர்காணல் நடத்தி தகுதியுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என முடிவு செய்து, தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவித்துள்ளது அறநிலையத்துறை. திமுகவினர், அரசியல் கலப்பில்லாத திமுக ஆதரவாளர்கள், பொதுநல அமைப்புகளைச் சார்ந்த செயற்பாட்டாளர்கள் என பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பம்
கோவில் அறங்காவல் குழுவில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் இருந்து வருவதால் அதனை உடைத்தெரியவே இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த உறுப்பினர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை நிலை நிறுத்தும் விதமாக இத்தகைய விண்ணப்பங்களை வரவேற்கும் துறை அதிகாரிகள், சில பல நிபந்தனைகளையும் அறிவித்துள்ளனர்

அறங்காவலர்
இதனை கவனித்த தமிழக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், அறங்காவல் குழுவிலிருந்து நமக்கு நெருக்கமான ஆட்களை திமுக வெளியேற்றும் திட்டத்தில் இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறதாம். திமுக தரப்பு வேண்டுமென்றே இப்படி செய்கிறது. எங்களின் பங்களிப்பு அறங்காவலர் குழுவில் இருக்க கூடாது என்பதால் இப்படி செய்கிறார்கள் என்று பாஜக நிர்வாகிகள் தரப்பில் குரல்கள் கேட்க தொடங்கி உள்ளன.

விண்ணப்பம்
இதனால், இதனை எளிதாக கடந்து செல்ல முடியாது என தீர்மானித்து, ஒவ்வொரு கோயில்களுக்கும் நமக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் விண்ணப்பிக்க வேண்டும். எப்படி தேர்வு செய்கிறார்கள் என பார்ப்போம் என்று முடிவு செய்துவிட்டு, பாஜகவினர் பலரையும் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

வெடிக்கும்
தங்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறதா என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ் தரப்பும் சோதிக்க உள்ளது. ஒருவேளை விண்ணப்பம் ஏற்கப்படாத பட்சத்தில் அது பெரிதாக வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான நேர்காணல் நடத்தி முடிவுகளை அறிவிக்கும் போது அறங்காவல் குழு உறுப்பினர்கள் நியமன விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள் அறநிலையத்துறை வட்டார தலைகள்.












Click it and Unblock the Notifications