"ஒன் மினிட்".. கோட்ஸேவை ஆதரித்து பேசியது ஏன்? தேர்தலில் வென்றதும் உமா ஆனந்தன் என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: சென்னையில் 134வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டு வென்ற உமா ஆனந்தன் தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தின் 134-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் உமா ஆனந்தன். பாஜக கட்சி சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் வீடியோ ஒன்று இணையம் முழுக்க கடந்த சில நாட்களுக்கு முன் வைரலானது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டிதான் இந்த சர்ச்சைக்கு காரணம். அதில் கோட்ஸேவிற்கு ஆதரவாக இவர் பேசி உள்ளார்.

கோட்ஸே
அதில், கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயம். அவர் ஒரு இந்து.. இப்பவும் சொல்கிறேன்.. எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது. நான் பெருமையாக சொல்கிறேன்.. நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவி வருகிறது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெற்றி
இன்னொரு பேட்டி ஒன்றில்,, பிராமின் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.. ஜாதிகள் இருக்கிறது.. அது நம்முடைய கலாச்சாரத்தில் ஒன்று. ஜாதிதான் நம்முடைய அடையாளம் ஜாதிகள் இல்லை என்றால் நம்முடைய கலாச்சாரம் கிடையாது, என்று இவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தற்போது 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதலில் உமா ஆனந்தன் தோல்வி அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அது பொய் செய்தி என்று உறுதியானது.

உமா ஆனந்தன்
இந்த நிலையில் உமா ஆனந்தன் தனது வெற்றி குறித்து பேட்டி அளித்த உமா ஆனந்தன், எனக்கு வாக்களித்த எல்லோருக்கும் நன்றி. எனக்கு நம்பிக்கை, ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி. இப்போ என்னை சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா? இவர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தனர். அவ்வளவு வேலைகளை செய்தனர். அவர்கள் செய்த வேலைகள் மூலம் என்னை வெற்றிபெற செய்துள்ளனர். (பேசிக்கொண்டு இருக்கும் போதே பாரத் மாத கி ஜே என்று கோஷம் பின்னால் எழுப்பப்பட்டது). எனக்கு எவ்வளவு வாக்கு விழுந்தது என்று நீங்களே நெட்டில் பார்ப்பீர்கள்.

உண்மையான விவரம்
நீங்களே உண்மையான வாக்கு விவரங்களை வெளியிடுங்கள். அதிகாரபூர்வமாக எனக்கு எவ்வளவு வாக்கு கிடைத்தது என்று நீங்களே சோதித்துவிட்டு போடுங்கள். வதந்திகளை பற்றி நான் பேசவிரும்பவில்லை, என்றார். இதையடுத்து நீங்கள் கோட்ஸே ஆதரவாளர்கள் என்று கூறினீர்களே என்ற கேள்விக்கு.. ஒன் மினிட் ஒன் மினிட்..அது பழைய பேட்டி. 3 வருடத்திற்கு முன் கொடுத்த பேட்டி.

விளக்க முடியாது
அதை பற்றி நான் இங்கே விளக்க முடியாது. தனியாகத்தான் விளக்க வேண்டும். அதை பற்றி நான் கமெண்ட் செய்ய விரும்பவில்லை. நான் ஆக்கபூர்வமாக செயலாற்ற விரும்புகிறேன். என் வார்டு மக்களை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நன்றி. அவர்களுக்காக நான் சேவைகளை செய்வேன். அவர்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வருவேன்.

உமா ஆனந்தன் நன்றி
எனக்காக பாஜக என்ற கட்சியை கடந்து பலர் செயல்பட்டனர். சமூக வலைத்தளங்களிலும் சரி, களத்திலும் சரி பலர் வேலை பார்த்தனர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக உழைத்தனர். அவர்களுக்கு எல்லாம் நன்றி. அவர்களை எனக்கு முன் பின் கூட தெரியாது. அறிமுகம் இல்லாத நபர்கள் கூட எனக்கு வேலை செய்துள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி, என்று உமா ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications