"ஜீரணிக்கவே முடியாது".. ஒரே போடு.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸிடம் கொதித்த டாப் தலைகள்.. வருகிறார் சசிகலா?!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கட்சிக்குள் இரட்டை தலைமைக்கு எதிராக கடுமையாக குரல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. உடனடியாக அதிமுகவை மீட்கும் வகையில் சில கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று இரட்டையர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் 75 இடங்கள் பெற்று கொஞ்சம் டீசண்டான தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிக மோசமான படுதோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை.
அதிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் மொத்தமாக களத்தில் குதித்து தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தும் கூட.. முதல்வர் ஸ்டாலின் வெறும் ஆன்லைன் பிரச்சாரம் மூலமே திமுகவிற்கு வெற்றிகளை அள்ளி இருக்கிறார்.

அதிமுக தோல்வி
1996ல் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்ததே கிடையாது. 26 வருடங்களில் அதிமுக சந்தித்த மிக மோசமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி ஆகும் இது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இரட்டை தலைமை இருந்தும்.. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைகள் இருந்தும் கூட இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது.

சட்டசபை தேர்தல்
அதிலும் சட்டசபை தேர்தலிலாவது பாஜக கூட்டணிதான் தோல்விக்கு காரணம் என்று பழியை தூக்கி போட ஒரு கட்சி உடன் இருந்தது. ஆனால் இப்போது அதிமுக தனித்து நின்றும் தோல்வி அடைந்து இருக்கிறது. அதிமுக நிர்வாகிககளை இந்த தோல்வி மன ரீதியாக முடக்கி போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த கைதுகள், ரெய்டுகள் காரணமாக சோர்வாக இருந்த நிர்வாகிகள் இந்த தோல்வியால் துவண்டு போய்விட்டதாக ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்புடன் சொல்கிறார்கள்.

அதிமுக தோல்வி
அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வியை அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி, இந்தளவுக்கு மோசமான தோல்வியை சந்திக்கிறதென்றால் காரணம் தலைமை சரியில்லை என்று நிர்வாகிகள் புலம்ப தொடங்கி உள்ளனராம். இதை பற்றிய கோபமாக புகார் தலைமைக்கும் சென்று இருக்கிறதாம். இத்தனை கோடி தொண்டர்கள் இருந்தும் தேர்தல் வியூகங்களை அமைக்கத் தெரியாததால்தான்அ திமுக தோல்வி அடைந்துவிட்டது என்று கட்சி நிர்வாகிகள் கடுமையான புகார்களை வைக்க தொடங்கி உள்ளனர்.

ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை
தலைமை சரியாக இருந்தால் இப்படி நடந்து இருக்காது. இனியும் இரட்டையர்களை நம்புவது சரியாக இருக்காது என்று கட்சிக்குள் இருக்கும் டாப் தலைகள் சந்தேக வார்த்தைகளை வீசி இருக்கிறார்களாம். அதிலும் அமமுக கட்சி இந்த தேர்தலில் பல இடங்களில் கணிசமான வாக்குகளையும் சில வெற்றிகளையும் பெற்றிருக்கிறது. இந்த வாக்குகள் அதிமுகவின் வாக்குகள். அதனால் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் சில பாடங்களை உணர்ந்து, மனமாச்சர்யங்களை உதறி விட்டு சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர சம்மதியுங்கள் என்று அதிமுகவின் டாப் நிர்வாகிகள் சிலர் கட்சி இரட்டையருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

தலைமை சரி இல்லை
ஒற்றை தலைமைதான் அதிமுகவை காப்பாற்றும் என்று மூத்த தலைவர்களிடம் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் கட்சியின் உண்மையான நிர்வாகிகள். இந்த தேர்தலில், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பாஜக அறுவடை செய்திருக்கிறது. கணிசமான வாக்குகளை பரவலாக வாங்கியிருப்பதை கவனிக்க வேண்டும். இவர்களின் வளர்ச்சி அதிமுகவுக்கு ஆபத்து. பல இடங்களில் அதிமுகவை முந்தி பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தலைமை சரி இல்லை என்பதை பட்டவர்த்தனமாக லைட் போட்டு காண்பித்து இருக்கிறது இந்த சறுக்கல்.

ஒற்றை தலைமை
அதனால் இப்போதே கட்சியை வலைமைப்படுத்த வேண்டும். திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்பதை நிலை நிறுத்த வேண்டும். இதற்கு சில அதிரடி முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும் என்று கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் தலைமைக்கு ஆலோசனை வழங்கி உள்ளனராம். முக்கியமாக சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவது முக்கியமானதாக இருக்க வேண்டும் என தென் மாவட்ட அதிமுக மாஜிக்கள் அனைவரும் எடப்பாடி, பன்னீர், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோரிடம் வலியுறுத்த துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
Recommended Video

சசிகலா
சசிகலாவிற்கு உயர் பதவியை கொடுத்து அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இது அதிமுக இழந்த முக்குலத்தோர் வாக்குகள் உட்பட தென் மண்டல வாக்குகளை மீண்டும் பெற உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்தி உள்ளனராம். மேலும் டெல்டா செல்வாக்கையும் மீட்டு எடுக்கவும், பெண்கள் வாக்குகளை மீண்டும் பெறவும் சசிகலாதான் சரியான சாய்ஸ்ஸாக இருப்பார் என்று டாப் லீடர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ்ஸிடம் அறிவுரை வழங்கி உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications