Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல்.. இது ரொம்ப முக்கியம்.. அரசுக்கு ராமதாஸ் அனுப்பிய "மெசேஜ்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நேர்மையாக நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுல்ளதாவது: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை ஜனவரி 19-ஆம் தேதி வரை வாக்குச்சீட்டு முறையில் நடத்துவதற்கு அதன் நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக வாக்காளர் பட்டியலிலும், தேர்தல் நடத்தும் முறையிலும் பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டிருந்தன.

அவற்றை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து ஆன்லைன் முறையில் வாக்குப்பதிவை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கடந்த நவம்பர் 20-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் கட்சிகளும், மருத்துவர் சங்கங்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன.

உயர் நீதிமன்றம் ஆணை

உயர் நீதிமன்றம் ஆணை

மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, மருத்துவக் கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஆணையிட்டது. அதற்குள்ளாக தமிழ்நாடு மருத்துவப் பதிவு சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொண்டது.

"நேர்மையாக நடத்தும் அக்கறை இல்லை"

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் இப்போதைய நிர்வாகிகளுக்கு அந்த அக்கறை இல்லாததால், உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருக்கின்றனர்.

"பெருமைமிக்க அமைப்பு"

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வழங்குவதிலும், மருத்துவ சேவை வழங்குவதிலும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் பங்கு ஈடு இணையற்றது. தமிழ்நாட்டில் மருத்துவம் படித்த மருத்துவர்களை பதிவு செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு. தமிழ்நாட்டில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கலாமா என்பது குறித்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரமும் இந்த அமைப்புக்கு தான் உண்டு.

"தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும்"

இத்தகைய பெருமையும், சிறப்பும் மிக்க அமைப்பின் நிர்வாகிகளாக, தகுதியும் - திறமையும், நேர்மையும் உள்ளவர்கள் தான் வர வேண்டும். அதற்கு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மருத்துவக் கவுன்சில் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட, தேர்தலுக்கு தடை விதிக்கக்கூடாது என்ற மருத்துவக் கவுன்சிலின் கோரிக்கையை ஏற்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து விட்டது.

"வாக்காளர் பட்டியலை திருத்த வேண்டும்"

அதனால், ஒற்றை நீதிபதியின் ஆணை தான் இப்போது வரை நடைமுறையில் உள்ளது. அதன்படி, 1914-ஆம் ஆண்டின் மெட்ராஸ் மருத்துவப் பதிவு சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்; தகுதியுடைய மருத்துவர்களின் பெயர்கள் அவர்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இடம் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்; அப்பட்டியல் மருத்துவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பணிகளை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மேற்பார்வையில் செய்து முடித்த பிறகு, மருத்துவக் கவுன்சில் தேர்தல் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+