"என் பேண்ட்டுக்குள் என்ன இருக்குன்னு ஏன் பார்க்கனும்"? ட்விட்டரில் இறங்கி அடிச்ச உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ட்விட்டரில் ஆடிய ருத்ரதாண்டவம் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
சனாதன ஒழிப்பு சர்ச்சைகளின் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து எதுவும் எழுதாமல், கொசுவர்த்தி சுருள் எரிகிற ஒரு போட்டோவை மட்டும் போட்டிருந்தார். அதுவே மிகப் பெரும் விவாதத்தை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் ஏற்படுத்தி வருகிறது.

அத்துடன் மற்றொரு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நீ விளையாடு நண்பா என அவருக்கு இந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார். சனாதன ஒழிப்பு விவகாரத்தில் கொசுக்களை கொசுவர்த்தி எரித்து கொல்வதைப் போல கொல்லுவேன் என்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கொந்தளித்திருந்தார்.
இந்தப் பஞ்சாயத்துகளுக்கு நடுவே, தாம் ட்விட்டரில் போட்ட பதிவுக்கு யார் என்ன அர்த்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு எனவும் விளக்கம் தந்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதனிடையே உதயநிதியின் ட்விட்டர் பக்கத்தில், @MumukshuSavitri என்ற நெட்டிசன், Why have you put a photo of what's happening inside the rear part of your pants? Not that it looks any different from when you open your mouth என ஆபாசமாக பதிவிட்டிருந்தார். இதனை கண்டு கடந்தும் போகவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த ஆபாச பதிவர் எதிர்பார்க்காத வகையில், Why are you seeing what's happening inside my pants? 😳 not a good behaviour என நக்கலாக நச் பதிலடி கொடுத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரது இந்த பதில் அடுத்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் தாத்தா கருணாநிதி ஸ்டைலில் நச்சென பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனவும் பாராட்டுகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications