"கரண்ட்" மாதிரி தீயாக வேலை செய்த செந்தில் பாலாஜி.. மின்சார துறையை அள்ளித்தந்த ஸ்டாலின்.. தெறி முடிவு,
சென்னை: தமிழக அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், திமுக அமைச்சரவையின் முதல் கட்ட லிஸ்ட் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் வென்றுள்ள திமுக கூட்டணி அரசு நாளை ஆட்சி அமைக்க உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை காலை அமைச்சர்களோடு சேர்ந்து பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து தற்போது அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து, பின் அமமுக சென்று, அதன்பின் திமுகவிற்கு வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் திமுக வந்த முதல் நாளில் இருந்தே கட்சியில் பெரிய அளவில் மதிக்கப்பட்டார்.

கரூர்
முக்கியமாக கரூரில் திமுகவை பலப்படுத்தும் டாஸ்க் இவருக்கு கொடுக்கப்பட்டது. லோக்சபா தேர்தலிலும் கரூரில் திமுக கூட்டணி கலக்க இவர் காரணமாக இருந்தார். அங்கிருந்த உட்கட்சி பூசல்களை சரி செய்து, கட்சியை செந்தில் பாலாஜி பலப்படுத்தினார். காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சட்டசபை தேர்தல்
அரவக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த செந்தில் பாலாஜி 2021 சட்டசபை தேர்தலில் கரூரில் நின்று வெற்றிபெற்றார். மேலும் கரூரில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயுபுரம் 4ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றிபெற இவரின் தீவிர பணியும் காரணம்.

தீவிரம்
திமுகவின் வெற்றிக்காக செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் தீவிரமாக உழைத்தார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மிக முக்கியமான துறையான மின்சார துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு மது விளக்கு, ஆயத்தீர்வு துறை, மரபுசாரா எரிசக்தி துறை ஆகிய துறைகள் செந்தில் பாலாஜியின் உழைப்புக்கு வெகுமதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications