டெல்லி போய் வந்த எம்.பிக்கள் பலருக்கு திடீர் காய்ச்சல்.. லிஸ்ட்ல இத்தனை பேரா? அமைச்சர் கூட சொன்னாரே!
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பலர் திடீர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெங்கு, நிஃபா என பரவி வரும் சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்காக டெல்லி சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி திடீர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திருமாவளவன். அவரை ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமாவளவனுக்கு காய்ச்சல்: வரும் 30 ஆம் தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் திருமாவளவனை சந்திக்க வரவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுத் திரும்பிய பிறகு சோர்வாக இருந்து வந்த திருமாவளவன் அதன் பிறகும் சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு கருத்தரங்கம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், உடல் நலம் குன்றியதால் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். திருமாவளவன் மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக எம்.பிக்கள் அண்மையில் டெல்லியில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பிறகு தான் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனிமொழிக்கு உடல் நலக்குறைவு: தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி கருணாநிதிக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் சென்னையில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தபடியே காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 14ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கனிமொழி மேற்கொண்டு வந்த நிலையில் தான், கனிமொழிக்கு திடீரென உடல் சோர்வும், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை வீட்டில் ஓய்வில் இருந்தபடியே மேற்கொண்டு வருகிறாராம்.
எம்.பிக்கள் பலருக்கும்: இதேபோல தென் சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், உடல் நலக்குறைவால் அந்த நிகழ்ச்சிக்கு அவர் செல்லவில்லை.
திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அவர் தனிமைப் படுத்திக்கொண்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். அதேபோல, நீலகிரி திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவுக்கும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்மையில் டெல்லிக்குச் சென்று திரும்பிய அரசியல் பிரமுகர்கள் பலர் பீதியில் இருந்து வருகின்றனராம்.
அமைச்சர் சொன்னாரே: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. கேரளாவில் நிபா காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் டெல்லி சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் சென்னை தாம்பரத்தை அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் தமிழக அரசின் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த கூட்டத் தொடரில் பங்கேற்ற தமிழக எம்.பிக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு, அவர்களது வீட்டில் ஓய்வில் உள்ளனர். எனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவர்கள், டெங்கு காய்ச்சலுக்கு தனி கவனம் செலுத்தி, தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்" எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
இந்துக்களின் ஒரே பாதுகாப்பு திமுக.. பிடிஆரை வைத்து கொண்டு சொல்கிறேன்.. மதுரையில் கனிமொழி சம்பவம் -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications